புராண பின்புலம்
தல வரலாறு சிவகணங்களைச் சேர்ந்த மால்யவான், புஷ்ப தந்தன் என்ற இருவரும் தங்களின் யார் சிவ பூஜையில் மேம்பட்டவர்கள் என்று பூசலிட்டு சிவனடி சேர்கின்றனர். . அடுத்த பிறவியில் மால்யவான் ஞானமுடைய ஒரு (ஓப்பற்ற) சிலந்தியாகவும், புஷ்பதந்தன் மிக்க தவத்து ஓர் (ஒப்பற்ற) வெள்ளையானையாகவும் பிறப்பு எடுத்து இத்தலத்து இறைவரை வழிபடுகின்றனர். இந்தப் பிறவியிலும் சிலந்திக்கும் யானைக்கும் பூஜையிலே போட்டி இருந்தமையால் சிலந்தி யானையை கடிக்க யானைக்கு முக்தியும், சிலந்திக்கு கோட்செங்கண்னான் என்ற அரசர் பதவியும் இறைவர் வழங்கி அருள் புரிந்தார். ஜம்புநாயகருக்கு முதல் மாட க்கோயில் கட்டிய பெருமை கோச்செங்கணாருக்கே உரியது. இவர் 78 மாடக்கோயில்கள் எழுப்பியிருக்கிறார். அதற்கு சான்றாக அப்பர் அருளிய ஒரு திருத்தாண்டகப் பாடல். இந்தத் திருத்தலம் மூவரால்...தல வரலாறு சிவகணங்களைச் சேர்ந்த மால்யவான், புஷ்ப தந்தன் என்ற இருவரும் தங்களின் யார் சிவ பூஜையில் மேம்பட்டவர்கள் என்று பூசலிட்டு சிவனடி சேர்கின்றனர். . அடுத்த பிறவியில் மால்யவான் ஞானமுடைய ஒரு (ஓப்பற்ற) சிலந்தியாகவும், புஷ்பதந்தன் மிக்க தவத்து ஓர் (ஒப்பற்ற) வெள்ளையானையாகவும் பிறப்பு எடுத்து இத்தலத்து இறைவரை வழிபடுகின்றனர். இந்தப் பிறவியிலும் சிலந்திக்கும் யானைக்கும் பூஜையிலே போட்டி இருந்தமையால் சிலந்தி யானையை கடிக்க யானைக்கு முக்தியும், சிலந்திக்கு கோட்செங்கண்னான் என்ற அரசர் பதவியும் இறைவர் வழங்கி அருள் புரிந்தார். ஜம்புநாயகருக்கு முதல் மாட க்கோயில் கட்டிய பெருமை கோச்செங்கணாருக்கே உரியது. இவர் 78 மாடக்கோயில்கள் எழுப்பியிருக்கிறார். அதற்கு சான்றாக அப்பர் அருளிய ஒரு திருத்தாண்டகப் பாடல். இந்தத் திருத்தலம் மூவரால் பாடல் பெற்றது திருஞானசம்பந்தப் பெருமான் மூன்று திருப்பதிகங்களும் , திருநாவுக்கரசு தேவனாயனார் மூன்று திருப்பதிகங்களும், மற்றும் சுந்தரமூர்த்தி நாயனார் ஒரு திருப்பதிகமும், மாணிக்கவாசகர் சுவாமிகள் ஒரு பாடலில் இத்திருத்தலத்தை தென் ஆனைக்காவானை தென்பாண்டி நாட்டானை என்று குறிப்பிட்டும், ஐயடிகள் காடவர்கோன் ஒரு வெண்பாவும் பாடி அருளி இருக்கிறார்கள். சேக்கிழார் பெருமான், திருவானைக்கா திருத்தலத்தை எழுப்பிய கோட்செங்கட் சோழ நாயனாருடைய வரலாற்றினை 18 பாடல்களாக அருளி இருக்கிறார்கள். கச்சியப்ப முனிவர், தாயுமானவர், கவி காளமேகம், அருணகிரிநாதர் மற்றும் மீனாட்சி சுந்தரம் பிள்ளை போன்றவர்களும் இத்தலத்து இறைவனை புகழ்ந்து பாடி இருக்கிறார்கள் இத்திருத்தலம் ஜம்புகேஸ்வரம் அதாவது நாவலம் தீவு என்று அறியப்படுகின்றது. ஜம்பு என்ற பெயருடைய மகரிஷி சிவனை நோக்கி தவம் புரிந்தார். அவருக்கு கிடைத்தற்கரிய வெண்நாவல் பழம் ஒன்று கிடைத்தது. அட்டமாசித்தி கைவரப்பெற்ற அம்முனிவர் அப்பழத்தினை திருக்கைலாயத்திற்கு எடுத்துச் சென்று சிவப்பிரசாதமாக படைத்தார். சிவன் அப்பழத்தை உண்டு விதையை உமிழ, இறைவர் திருவாயிலிருந்து வரும் எதுவாயினும் பிரசாதமே என முனிவர் அதனை பெற்று விழுங்கினார். அச்சமயம் ஜம்பு மகரிஷி சிவனிடம் தாம் பூலோகத்தில் தவம் செய்யும் பொழுது சிவபிரான் தன் கண் முன்பாக எப்பொழுதும் தரிசனம் கொடுக்க வேண்டும் என ஒரு வரம் கேட்டார். இறைவனும் அவ்வண்ணமே ஆகுக உரிய காலம் வரும் பொழுது நாம் எழுந்து அருளுவோம் என்று சொல்லி மறைந்தார். ஜம்பு முனிவர் ஜம்புகேஸ்வரம் என்று அழைக்கப்படும் நாவலம் தீவில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தபோது அவர் உண்ட விதை வயிற்றிலிருந்து மரமாக தலையை உடைத்துக் கொண்டு வெளியே வந்தது. திருக்கயிலாயத்தில் இருக்கும் சிவன் முனிவருக்கு காட்சி கொடுக்க திருஉள்ளம் கொள்கிறார். இதற்கான திருவிளையாடலாக பார்வதிதேவி மனதிலே ஓர் இச்சையை விளைவித்து ஜம்பு முனிவருக்கு காட்சி கொடுக்க முடிவு செய்கிறார். சிவனின் எண்ணப்படி பார்வதிதேவி சிவனுடைய இரு கண்களை தம் கைகளால் மூடி விளையாடுகிறார். இறைவி இறைவனின் கண்களை மூட 224 புவனங்களும் இருட்டிலே மூழ்கியது. இழந்த வெளிச்சத்தை மீண்டும் கொண்டுவர சிவன் நெற்றிக்கண்ணை திறந்து உலகிற்கு வெளிச்சத்தினை கொண்டுவந்தார். சிவன் பார்வதியை நோக்கி உன்னுடைய பக்குவமில்லாத செயலினாலேயே இந்த சம்பவம் நிகழ்ந்தது. பக்குவம் அற்ற இச்செயலை செய்த நீ பூலோகம் சென்று என்னை ஆராதனை செய்வாயாக என்று பார்வதிக்கு ஆணையிடுகிறார். பார்வதிதேவி அகிலாண்டநாயகியாக பூலோகத்திற்கு எழுந்தருளினார். சிவ பூஜை செய்ய ஏற்ற இடம் தேடிய போது தெற்கு திசையில் காவிரியும் வடக்கு திசையில் கொள்ளிடமும் அமைந்த இடைப்பகுதியில் உள்ள இத்தீவில் வெண் நாவல் மரங்கள் நிறைந்து இருந்தது. அன்னை அகிலாண்டநாயகி சிவனை பூஜிக்க இந்த நாவலம் தீவினை (நாவல் மரங்கள் அடர்ந்த காட்டினை) தேர்ந்தெடுத்தார்.. கையிலே நீரை ஏந்தியபடி சிவனை தூய அன்போடு நினைக்க கைலாயத்தில் வீற்றிருக்கும் சிவபிரான் - எவ்விடத்தும் நீ அலாது இல்லை என்ற தன்மைக்கு ஏற்ப நீர் வடிவமாக செழுநீர்த் திரள்நாதராக லிங்க வடிவிலே தோன்றினார். . அகிலாண்டநாயகி சிவனை வழிபாடு செய்ய தேர்ந்தெடுத்த இடம் முனிவருக்கு அருகில் மற்றும் வெண்நாவல் மரத்தடி ஆகும். ஒரே நேரத்தில் அகிலாண்ட நாயகிக்கும் ஜம்பு முனிவருக்கும் சிவனார் செழுநீர்த்திறள்நாதராக காட்சி தருகிறார். அன்னை அகிலாண்ட நாயகி மற்றும் ஜம்பு முனிவரை தவிர, ஐந்து அறிவு உடைய ஞானம் உடைய ஒரு சிலந்தியும் மற்றும் மிக்க தவத்து ஓர் வெள்ளை யானையும் சிவனை வழிபட்டு அருள் பெற்றது. இந்த வெள்ளை யானையும் சிலந்தியும் முற்பிறவியில் புஷ்ப தந்தன் மற்றும் மால்யவான் என்ற சிவகணங்களாக இருந்தனர். சிவபூஜையின் போது தம் பத்தியே உயர்ந்த்து என இருவருக்கும் பூசல் ஏற்பட்டு இறைவனடி சேர்ந்தனர். இறைவனார் திருஉள்ளத்தின்படி அடுத்த பிறவியில் புஷ்ப தந்தன் - வெள்ளையானையாகவும், மாலியவான் - சிலந்தியாகவும் பிறக்கும்படி செய்தார். முற்பிறவியின் பலனாக வெள்ளை யானை நாவலம் தீவுக்கு எழுந்தருளி தனக்கு உரிய முறையில் நீரினாலும் மலர்களாலும் சிவனை பூஜை செய்தது. அதேநேரத்தில் சிலந்தி தனக்குரிய பாணியில் வெண்ணாவல் மரத்தின் கீழ் வீற்றிருக்கும் ஜம்பு நாயகருடைய திருமேனியில் உலர்ந்த சருகுகள் வீழா வண்ணம் தம் அன்பு கலந்த வாயின் நூலால் ஒரு சித்திரப் பந்தல் அமைத்து காத்தது. எச்சிலால் ஆக்கப்பட்ட இந்தப் பந்தல் அணாச்சாரம், அனுசிதம் என்று வெள்ளையானை நினைத்து வலையை சிதைத்தது. . தினமும் யானை, சிலந்தி வலையினை அழிப்பதும், மீண்டும் சிலந்தி சித்திரப் பந்தல் அமைப்பதுமான செயல் தொடர்வதும் நடந்தது. கோபம் கொண்ட சிலந்தி யானையின் செயலை தண்டிக்க எண்ணி துதிக்கைக்குள் புகுந்து கடிக்க, வலி தாங்க மாட்டாத யானை துதிக்கையால் தரையில் மோதி உடனே இறந்தது. உள் புக்க சிலந்தியும் இறந்தது. யாதொரு உயிர்க்கும் தீங்கிழைக்காத வெள்ளை யானைக்கு முக்தியும், யானைக்கு தீங்கிழைத்ததாலும் மற்றும் தான் செய்த சித்திரப் பந்தலை யானை சிதைத்து விட்டதே என்று வருந்தியமையாலும் சிலந்திக்கு மறுபிறவி கொடுத்து அருளினார் ஈசன். அந்தத் தருணத்தில் தில்லை நடராஜப் பெருமானிடம் நீண்ட காலம் மக்கட் பேறு இல்லாத சுப தேவன் - கமலவதி என்ற சோழ அரசனும் அரசியும் பிள்ளைப்பேறு வேண்டி வரம் கேட்டனர். அத்தம்பதியரது திருமகனாக அவதாரம் செய்திட இறைவன் சிலந்திக்கு அருளினார். இறைவனது வரத்தினால் கருவுற்றார் சோழமாதேவி. பிள்ளைப்பேறு நெருங்கிய அத்தருணத்தல் அறவானர்கள் என்று சொல்லப்படும் காலம் உணர் பழையார் - அதாவது காலத்தைக் கணிக்கும் ஜோதிடர்கள் - ஒரு நாழிகை கழித்து பிள்ளை பிறக்கும் எனின், இந்தக் குழந்தை சிவனுக்கு நற்றொண்டு ஆற்றுவர் என்று கூறினர். இதனை கேட்ட அரசியார் சற்றும் தாமதியாமல் தம்மை தலைகீழாக நிறுத்தும்படி அருகில் இருப்பவர்களிடம் ஆணையிட, அவ்வண்ணமே அவரை தலைகீழாக நிறுத்தினர். ஒரு நாழிகை கழித்தபின் பிள்ளையை ஈன்று எடுத்தார். தலைகீழாக இருந்ததால் பிள்ளையின் கண்களிரண்டும் சிவந்த நிறத்தில் இருக்க- கோட்செங்கண் என பெயரை சூட்டினார்கள். இதன் பொருள்- கோ என்றால் அரசன். செங்கண் என்றால் சிவந்த கண்ணை உடையவர் என்பதாகும். இந்த அரசர் தான் பின்நாளில் ஜம்பு நாயகருக்கு யானை புகாத வண்ணம் திருக்கோயிலை எழுப்புகிறார். இத்திருக்கோயில் தந்திபுகாவாயில் என்ற பெயரை பெறுகிறது. இத்திருதலத்தின் வேறு பெயர்கள் நாவலம் தீவு, ஜம்புகேஸ்வரம், ஜம்புவனம், இபக்கா, இபவனம், காவை, தந்தி வனம் போன்றவை. ஞானம் வேண்டி பெருந்தவக் கொழுந்தாக பெண்ணின் நல்லவளாக அம்மை அகிலாண்டநாயகி சிவனை வழிபடுகின்றமையால் இந்தத் திருத்தலம் ஞானபூமி என்றும் ஞானக்ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. கூடற் சதுக்கம் என்ற பெயரும் இத்தலத்திற்கு உண்டு கூடற் சதுக்கம் என்று அறியப்படுகின்றது திருவானைக்கா. நான்கு திருத்தலங்களை உள்ளடக்கியது திருமயேந்திரம், திருக்கயிலாயம், திருவாரூர் மற்றும் திருவானைக்கா. கூடற் சதுக்கத்தை விளக்கும் பெரிய புராணப் பாடல். இந்த நான்கு திருத்தலங்களும் நம் சுவாமி சன்னதியின் கொடி மரத்தின் அருகாமையில் உள்ள நான்கு தூண்கள் விளக்கம் தருகின்றது முதல் தூண் திருவானைக்கா திருத்தலத்தையும் பக்கத்தில் உள்ள தூண் திருவாரூர் திருத்தலத்தையும் அதற்கு எதிரில் உள்ள தூண் திருமயேந்திரத்தையும் அதற்கு அருகாமையில் உள்ள தூண் திருக்கயிலாயத்தையும் குறிப்பிடுகின்றது என்பதை கண்டு நாம் வணங்கி மகிழலாம். சிவன் குருவாக இருந்து அகிலாண்ட நாயகிக்கு ஞான உபதேசம் செய்கிறார். ஞானம் ஈசன் பால் அன்பே என்பது பெரிய புராணம். அன்பின் உடைய வெளிப்பாடு சிவனை பூஜிப்பது. அதைத்தான் அம்மை தினமும் செய்து கொண்டு வருகிறாள். இந்த ஆலயத்தில் தினமும் உச்சிக்கால வேளையில் அர்ச்சகர் புடவை அணிந்து கொண்டு ஜம்பு நாயகரை வழிபாடு செய்து, பிறகு கோபூஜை செய்து மீண்டும் அம்மன் சன்னதிக்கு திரும்புவார். இந்த நிகழ்வு தினமும் நடைபெறும். இதுவே இந்த ஆலயத்தினுடைய ஒரு தனிப்பெரும் சிறப்பு. பிரம்மா தான் படைத்த பெண்ணாகிய திலோத்தமையை அடைவதற்கு முற்பட்ட மையால் பிரம்மகத்தி தோஷம் பிடிக்கிறது. ஜம்பு நாயகரை வழிபட்டு ஆராதனை செய்கிறார். மனமிரங்கிய பார்வதி சிவனாரிடம் பிரம்மனுக்கு அனுக்கிரஹம் செய்ய பரிந்துரைக்க அதற்கு சிவன் - திரிபுர சுந்தரியாகிய உன் மீது பிரம்மா ஆசைப்பட்டுவிட்டால் அச்செயலுக்கு பிராயச்சித்தமே இல்லை. அதனால் நீ நானாகவும் நான் நீயாகவும் மாறுவேடத்தில் சென்று பிரம்மாவுக்கு அருள் புரிவோம் என்று முடிவெடுக்க அதன்படியே சிவன் - பார்வதியாகவும், பார்வதி - சிவனாகவும் பிரம்மாவின் முன்பு. எழுந்தருளுகிறார்கள். தம் தவறை உணர்ந்த பிரம்மா வெட்கித் தலைகுனிந்து அம்மையப்பர் பாதங்களில் வீழ, அன்றைய தினம் அவனைப் பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் விலகியது. இந்த வைபவம் பங்குனி பிரம்மோற்ச்சவத்தின் போது ஒரு நிகழ்வாக பஞ்ச பிரகாரமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய ஒரு நாள் ஜம்பு நாயகருக்கு பெண் அலங்காரமும், அன்னை அகிலாண்ட நாயகிக்கு ஜம்பு நாயகரைப் போன்று அலங்காரமும் செய்து, பிரம்மா இவர்களை கைகூப்பிப் பார்த்தபடியே ஐந்து பிரகாரங்களிலும் எழுந்தருளுவார் உறையூரை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த சோழ மன்னர் தாம் நீராடும்போது ஆற்றில் தவறவிட்ட முத்துமணி மாலையினை இறைவனது திருமஞ்சனக் குடத்தில் புகச் செய்து அபிஷேகத்தின் போது அம்முத்து மாலை இறைவனின் கழுத்தில் மாலையாக விழ அதனை அணிந்து கொண்டு அருள் புரிந்தார் ஜம்பு நாயகர். காளமேகம் என்ற பெயருடைய ஒரு சாதாரண மனிதர் அகிலாண்ட நாயகியால் அருள் பெற்றார்.. அகிலாண்ட நாயகி தான் தரித்த தாம்பூலத்தை காளமேகம் வாயிலே உமிழ, அவர் கவி காளமேகம் ஆக அருள் பெற்றார் இந்திரன். ஜம்பு முனிவர், கௌதம முனிவர், பராசரர், அக்னி, வருணன், எட்டுத்திக்குப் பாலகர்கள், அஷ்டவசுக்கள், வாயு, ராமர், பராசரர், சூரியன், சந்திரன், பிரம்மா மற்றும் ஏனையோர். எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர் தாம் விரும்பும் உண்மையாவது பூசனை என உரைத்தருள அண்ணலார் தமை அர்ச்சனை புரிய ஆதரித்தாள் பெண்ணின் நல்லவள் ஆயின பெருந்தவக் கொழுந்து.