Session expires in: 1200s
அருள்மிகு ஜெம்புகேசுவரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில், திருச்சிராப்பள்ளி - 620005, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Jambukeswarar Akilandeswari Temple, Thiruchirappalli - 620005, Thiruchirappalli District [TM025706]
×
-

  திருக்கோயிலுக்கு வரும் சேவார்த்திகளுக்கு தினந்தோறும் பகல் 12-30 மணி அளவில் 200 நபர்களுக்கு அன்னதானம் நடைபெறுகிறது. பிரதி வாரம் வெள்ளிக்கிழமை வடை, பாயாசம் மற்றும் அப்பளத்துடன் கூடிய சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது ,அன்னதானம் செய்ய விரும்புவோர் ஒரு நாளைக்கு உண்டாகும் செலவிற்கு ரூ.7,000/- திருக்கோயிலில் செலுத்தி அன்னதாத் திட்டத்தில் கலந்து கொள்ளலாம் அல்லது ரூ.70,000/- முதலீடாக செலுத்தும் பட்சத்தில் அத்தொகையினை முதலீடு செய்து அதன் மூலம் கிடைக்கப் பெறும் வட்டியைக் கொண்டு வருடத்தில் பக்தர்கள் விரும்பும் ஏதாவது நாளில் மேற்படி அன்னதானம் செய்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேற்படி அன்னதான திட்டத்திற்கு 80 ஜி பிரிவின் கீழ் வருமான வரி விலக்கு பெறப்பட்டுள்ளது.